ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

உங்கள் ஊரின் பெயர் காரணம் தெரியுமா

அம்பத்தூர்

108 சக்தி ஸ்தலங்கள் இருப்பது நமக்கு தெரியும் அதில் 51வது ஊர் என்பதை குறிக்கும் வகையில் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் இந்த ஊர் அம்பத்தூர் என்று மாறியது.

ஆவடி

 Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கத்தையே ஆவடி(AVADI) என்று சொல்கிறார்கள்

குரோம்பேட்டை

 chrome leather factory இந்தப் பகுதியில் அதிக அளவில் இருந்த காரணத்தினால் இந்தப் பகுதி குரோம்பேட்டை எனறு அழைத்தார்கள்.

கோடம்பாக்கம்

17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரம் இந்தப் பகுதியை. அவருடைய குதிரைகளின் பசியை போக்கக்கூடிய  நந்தவனமாக இது இருந்ததாம். அதனால் garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் அவர் பெயர் வைத்தாராம். பிற்காலத்தில் அதுதான் கோடம்பாக்கம் என்று மாறிவிட்டதாம்!

முகப்பேர்

மகப்பேறு என்ற சொல்  மருவி முகப்பேர் என்று ஆகிவிட்டது

தேனாம்பேட்டை

தென்னை மரங்கள் மிகுதியாக இருந்த பகுதியாக அது இருந்ததாம். அதனால் அந்தப்பகுதி தென்னம்பேட்டை என சொன்னார்கள். காலப்போக்கில் அது தேனாம்பேட்டையாக மாறி விட்டது.

சைதாப்பேட்டை
சையிது ஷா பேட்டை என்ற சொல்தான் காலப்போக்கில் சைதாபேட்டை என்று சொல்லப்படுகிறது.

வேளச்சேரி

முற்காலத்தில் வேதஸ்ரேணி எனறு சொல்லப்பட்ட இடமே இப்பொழுது  வேளச்சேரி என்று சொல்லப்படுகிறது

சேப்பாக்கம்


che bage (six gardens என்பது இதன் பொருள்) என்ற உருது வார்த்தையிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம் என்ற பெயராகும்.

பாண்டிபஜார்

சௌந்தர பாண்டியன் பஜார் என்பதுதான் இப்பொழுது பாண்டி பஜார் என்று அழைக்கப்படுகிறது

கேகேநகர்

கலைஞர் கருணாநிதி நகரை தான் நாம் கே.கே. நகர் எனறு அழைக்கிறோம்

மாம்பலம்

சிவபெருமானுக்கு பிடித்த வில்வ மரங்கள் அதிகம் இருந்த பகுதியாக இது இருந்த காரணத்தினால் மகாவில்வம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

பல்லாவரம்


பல்லவர்கள் ஆட்சி செய்த காரணத்தினால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்டது முற்காலத்தில் அப்புறம் இப்போது அது பல்லாவரம் என்று சொல்லப்படுகிறது.

பனகல் பார்க்

முற்காலத்தில் சென்னை மாகாணத்துக்கு முதல்வராக பனகல் ராஜ் என்பர் இருந்தார். அவருடைய நினைவாக இந்த இடம் பனகல் பார்க் என்று சொல்லப்படுகிறது

தி நகர்

நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயரை கொண்டு இந்த பகுதி தியாகராய நகர் என்று அழைக்கப்படுகிறது (தி.நகர்)…

புரசை வாக்கம்

புரசை மரங்கள் நிறைய இந்த பகுதியில் இருந்த காரணத்தினால், இந்தப் பகுதி புரசைவாக்கம் என்று அழைக்கப்பட்டது

பூந்தமல்லி

மல்லிகை பூக்கள் அதிகமாக இந்த பகுதியில் பயிரிடப்பட்டதாம். திருக்கச்சி நம்பி ஆழ்வார் இங்கிருந்துதான் தினமும்  பூக்களை பறித்துக் கொண்டு காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தாராம். அதனால்தான் இந்த இடம் சமஸ்கிருதத்தில்  புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது.  பிற்காலங்களில்  இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயராகும்.

தண்டையார் பேட்டை

 ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’ என்பவர் 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்தாராம். அவர் ஒரு முஸ்லீம் துறவி. அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் தொண்டி ஆகும். அதனால் இந்தப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அன்புடன் அழைத்தனர். அந்த ஏரியாவுக்குதான் இப்பொழுதுதண்டயார்பேட்டை என்ற பெயர் இருக்கிறது


மந்தை வெளி
முந்தைய காலத்தில் இந்த பகுதிகள் எல்லாம் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மேயும் பசும் புல்வெளிகளாகவும் திறந்தவெளிகளாகவும் இருந்த காரணத்தினால் அது மந்தைவெளி என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது

மயிலாப்பூர்

மயில்கள் நிறைய இந்த பகுதியில் இருந்ததாம். அவைகள் சந்தோஷமாக ஆடி திரியுமாம். இப்படி மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதுதான் காலத்தால் மருவி மயிலாப்பூர் என்று மாறிவிட்டது

போரூர்

பல்லவர்கள் வாழ்ந்த காலத்தில் போர்கள் நடத்த இந்தப் பகுதியை பயன்படுத்திய காரணத்தால் இந்தப் பகுதி போரூர் என்று சொல்லப்படுகிறது.

பெரம்பூர்

முற்காலத்தில் இந்தப் பகுதியில் மூங்கில் மரங்கள் நிறைய இருந்ததம். இப்படி மூங்கில் பிரம்பு கம்புகள் நிறைய வளர்ந்த காரணத்தினால் அது பெரம்பூர் என்று சொல்லப்பட்டது.

திரிசூலம்

திரிசூல நாதர் ஆலயம் இந்த பகுதியில் இருந்த காரணத்தினால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.

திருவல்லி கேணி

பார்த்தசாரதி கோவிலின் எதிர் பக்கத்தில் இருக்கும் குளத்தில் நிறைய அல்லி மல்ர்கள் பூக்குமாம். அதனால இந்தப்பகுதிக்கு  திருஅல்லிக்கேணி என பெயர் உண்டாகி விட்டது. பிற்காலத்தில் அதுவும் மருகி  திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என சொல்லப்படுகிறது.

பாரிமுனை

தாமஸ் பாரி என்னும் நபர் இந்தப் பகுதில் வியாபாரம்  செய்துவந்தாலாம். மக்கள் மத்தியில் அவருக்கு மிகவும் செல்வாக்கு இருந்ததாம். அதனால் அந்தப்பகுதி மக்கள் அவரின் பெயராலேயே இந்தப் பகுதியை அழைத்துவந்தனராம். அதுதான் அப்புறம் பாரிமுனை (பாரிஸ் கார்னர்) என்று ஆகிவிட்டது.

வளசரவாக்கம்

இறைவன் முருகள் வள்ளியுடன் சேர்ந்த ஊர் என்பதனால் இந்த ஊர் வள்ளிசேரிபாக்கம் என்று இருந்தது. இந்த ஊரில் பூமியில் முருகன் சிலை கிடைத்ததாம். வள்ளி சேரி பாக்கம் என்பதுதான் பிற்காலத்தில் மருவி  வளசரவாக்கம் என்று மாறிவிட்டது.

முகலிவாக்கம்

மௌளி என்றால் க்ரீடம். கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம். அது இன்று முகலிவாக்கம் என்ற சொல்லப்படுகிறது.

திருவான்மியூர்
 
வான்மிகம் என்றால் புற்று என்று ஒரு பொருள் உண்டு.
புற்றுகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இதற்கு திருவான்மியூர் என்ற பெயர் வந்தது.


கோட்டூர்

கோடு என்றால் வளைவு என்றறொரு பொருள் உண்டு. அடையாறு என்ற ஆறு சைதாப்பேட்டையில் இருந்து அடையாருக்கு செல்லும் வழியில் இந்தப் பகுதியில் வளைந்து செல்கின்ற காரணத்தினால் இந்த ஊருக்கு கோட்டூர் என்ற பெயர் வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அயனாவரம்

 அயம் என்றால்  நீர்நிலை, சுனை, குளம் என்ற பொருள்கள் உண்டு. நீர்நிலை என்பதன் அடிப்படையில் இப்பெயர் பெற்று அப்புறம் அயன்புரமாக மருவி அதற்கப்புறம் அயனாபுரமாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அயனாபுரம் மக்கின் பேச்சு  வழக்கில் அயனாவரம் ஆக மாறி இருக்கலாம் என்ற கருத்தே பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அமிஞ்சிக்கரை

அமைந்தகரை என்னும் பெயர் மருவி அமிஞ்சிக்கரை ஆகி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏரிக்கரையில் உருவாகிய குடியிருப்பு  என்று அர்த்தம் கொள்ளக்கூடிய வகையில் இது உள்ளது.  கூவம் ஆற்றுக்கும், பெரிய குளத்துக்கும் நடுவில் இயல்பாக  அமைந்த கரை பகுதி என்ற காரணத்தினால் இதை அமைந்தகரை என்று சொல்லியிருப்பார்கள் என்று கருத முடிகிறது.

கிண்டி

ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம்  கிண்டி என்ற பெயர் பெற்றுவிட்டது.

பரங்கிமலை
 
ப்ருங்கி முனிவர் வழிபட்ட மலை ப்ருங்கி மலை என்று பெயர் பெற்று பின்னர் அது மருவி பரங்கிமலை என்று மாறிவிட்டது

ராயபுரம்

பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் பகுதியே ராயர்புரம் ஆகும் இது மருவி இன்று ராயபுரம் என்று சொல்லப்படுகிறது.

சிந்தாரிபேட்டை

சிறிய அள்விலான தறிகள் மூலம் குழந்தைகளுக்கான துணிகளை உற்பத்தி செய்த  பகுதிதான் இன்று சிந்தாதரிப்பேட்டை என்ற சொல்லப்படுகிறது.

பெருங்களத்தூர்

பெரிய பெரிய குளங்கள் இங்கு இருந்ததாம். அதனால் இங்கு விவசாயம் னல்லபடியாக நடந்ததாம். பெரிய பெரிய குளங்களை பெற்றஊர் என்பதை குறிக்க இதை  பெருங்களத்தூர் என்று சொல்லிவிட்டனர்.

ராமாபுரம்

ராமபிரான் தங்கிய மாஞ்சோலைகளைக் கொண்ட இடம் என்பதை குறிக்க பயன்படுத்திய சொல்லே ராமாபுரம் என்றாகிவிட்டது.

குன்றத்தூர்

குன்றுகள் நிறைந்த ஊர் என்பதனால் அது குன்றத்ததூர் என்ற பெயர் பெற்றது.

ஸ்ரீ பெரும் பூதூர்

அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர் என்று சொல்லப்படுகிறது.


சுங்குவார் சத்திரம்

பழங்காலத்தில் வரி வசூல் செய்யப்பட்ட இடம் டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம் என்று சொல்லப்படுகிறது.

நந்தனம்

மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.

மாதவரம்

மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடமே இன்று மாதவரம் ஆகும். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் இங்கு உள்ளன.

காஞ்சிபுரம்

காலை ஆட்டினால் கஞ்சி வரும் என்று முற்காலத்தில் சொல்வதுண்டு. இந்த ஊர்காரர்கள் நெசவு தொழில செய்வார்கள். நெசவு தொழிலில் காலை ஆட்டி காலை ஆட்டி ஆட்டி நெசவு செய்வார்கள். இதனால் இந்த தொழிலால் அவர்களுக்க உண்ணும் உணவாகிய கஞ்சி தயாரிக்க தேவையான பணம் வரும் என்று பொருளாகும். இந்த பொருள்பர கஞ்சிவரும் என்ற பெயர் இருந்தது. அது காலப்போக்கில் கஞ்சிவரம் என்று ஆகி அப்புறம் காஞ்சிபுரம் என்று மருவியது என்று சொல்வதுண்டு.

வேடந்தாங்கல்

ஆங்கிலேயர் காலத்தில் இந்தப் பகுதிகளில்  வேடர்கள் தங்கி பறவைகளை வேட்டையாடினார்கள். இதன் காரணமாக வேடந்தாங்கல் என்று பெயர் வந்தது.

கோயம்புத்தூர்


கோவன்களால் உருவாக்கப்பட்ட புதிய ஊரானது கோவன்புத்தூர் என்று சொல்லப்பட்டதாம் அந்தக் காலத்தில். அப்புறம் அது பிற்காலத்தில் மருவி கோயம்புத்தூர் என்றாகி விட்டதாம்.

கல்லல்

கல்லாதவர்கள் யாரும் இல்லதவர்கள் கொண்ட ஊர் என்பதை குறிக்கும் வகையில் கல்லல் என்று அந்த ஊருக்கு பெயர் வைத்துக்கொண்டார்களாம் அந்தப்பகுதி மக்கள்.

வேலூர்

நல்லியக்கோடன் என்ற மன்னன் முன்பொரு காலத்தில் இருந்தானால். அவன் நாட்டுக்கு எதிரி நாட்டவர்கள் படைஎடுத்து வந்தார்களாம். அவள்களை நோக்கி கேணியில் பூத்த தாமரை மலர்களை எறிந்தானாம். அந்த மலர்கள் எல்லாம் இறைவன் முருககள் அருளால் வேலாக மாறி எதிரிகளை விரட்டி அடித்தனவாம். அதனால்தான் அந்த ஊருக்கு வேலூர் என்று பெயர் வந்ததாம்.
http://oor-peyar-karanam.blogspot.com/2016/01/blog-post.html

21 கருத்துகள்:

  1. ரேந்தல் என்று பெயர் ஏன் வந்தது

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. பூந்தமல்லி: அருள் மிகு வரதராஜ பெருமாள் கோயிலின் மகாலட்சுமி தாயார் இங்கு மல்லிகை மலரில் அவதரித்தாள். இவளை புஷ்பவல்லி என்று அழைக்கிறார்கள். இவள் பூவில் இருந்தவள் என்பதால் இவ்வூருக்கு பூவிருந்தவல்லி என பெயர் வந்தது . இப்போது அது மருவி பூந்தமல்லி என ஆகிவிட்டது.

    https://temple.dinamalar.com/New.php?id=1350

    பதிலளிநீக்கு
  4. கோரிப்பாளையம் என்று பெயர் ஏன் வந்தது

    பதிலளிநீக்கு
  5. எங்கஊர் வரலணு கோவப்படுரோம்





    பதிலளிநீக்கு
  6. எங்கஊர் மாலையீடு
    எங்கஊர் வரணும்

    பதிலளிநீக்கு
  7. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பெயர் காரணம் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. கன்னியாகுமரி மாவட்டம் பம்பம் எனும் ஊரின் பெயர் காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
  9. மதுரை மாவட்டம் பாலமேடு எனும் ஊரின் பெயர் காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
  10. கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரம் ஊரின் பெயர் காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
  11. கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரம் ஊரின் பெயர் காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
  12. Radhanallur பெயர் காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
  13. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பெயர் காரணம் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  14. பெரிய காயம்பட்டு பெயர் காரணம் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு