சனி, 6 பிப்ரவரி, 2016

பழைய ஊர்களின் பெயர்களும் புதிய ஊர்களின் பெயர்களும்

பழைய ஊர்களின் பெயர்களும் புதிய ஊர்களின் பெயர்களும்

ஏர்க்காடு
 
காடும் ஏரியும் அமைந்திருந்த பகுதியை ஏரிகாடு என்று பெயர்வைத்தார்கள்அது சிதைந்து ஏர்க்காடு என மாறிவிட்டது.

திருநெல்வேலி

நெல்லுக்கு வேலியிட்ட கதையின் நினைவாகவே, திருநெல்வேலிக்கு அந்த பெயர் வந்ததாம்.

பாளையங்கோட்டை

பாளையக்காரர் ஒருவரின் கோட்டை அந்தப்பகுதியில் இருந்ததால் அந்தப்பகுதிக்கு  பாளையங்கோட்டை என்று பெயர் வந்திருக்கிறது.

குற்றாலம்
 
குற்றால நாதரும், குழலாள்மணி அம்மையும் வீற்றிருந்து அருளாட்சி செய்யும் ஊர் குற்றாலம் என்று சொல்லிவிட்டார்கள்.

செங்கோட்டை

செம்மையான கோட்டை அமைந்த இடத்திற்கு செங்கோட்டை என்று பெயர் சூட்டிவிட்டனர்.

தேன்பொத்தை

தேன்கூடுகள் அதிகம் இருக்கும் பொத்தை (சிறிய மலை) உள்ள ஊர் தேன்பொத்தை என்று சொல்கின்றனர்.

பைம்பொழில்

பசுமையான சோலைகள் அமைந்திருந்த பகுதியை பைம்பொழில் என்று பெயர் சூட்டினார்கள் அந்த கால மக்கள்.

தென்கரை

ஆற்றின் தெற்குக் கரையில் அமைந்த பகுதிக்கு தென்கரை என்று பெயர் வைத்தனர்.

வடகரை

ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்த பகுதிக்கு வடகரை என்று பெயர் வைத்தனர்.

அடைக்கலப்பட்டிணம்

ஜாதி மோதல் வந்த காலத்தில், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடைக்கலம் தந்த காரணத்தினால் அந்த ஊருக்கு அடைக்கலபட்டணம் என்று சூட்டினார்கள்.

உள்ளாறு

இரண்டு பிரிவாகச் செல்லும் ஆற்றின் நடுவே அமைந்திருக்கும் ஊருக்கு உள்ளாறு என்ன்று பெயர் வைத்தனர்

ஆற்றுவழி

ஆற்றின் போக்கில் (வழியில்) அமைந்த பகுதிக்கு ஆற்றுவழி என்று பெயர் வைத்தனர்.

குத்துக்கல் வலசை

குத்துக்கல் போன்ற அமைப்பிலான கற்கள் அதிகமாக காணப்படும் பகுதியைகுத்துக்கல் வலசை என்று பெயர் வைத்து அழைத்தனர் அப்பகுதி மக்கள்.

அம்மையப்பபுரம்

அம்மா ஆகவும் அப்பா ஆகவும் இறைவனே பாதுகாக்கும் பகுதியை (
அம்மையாய் அப்பனாய் இறைவன் வீற்றிருக்கும் ) அம்மையப்பபுரம் என்று அழைத்தனர் அப்பகுதி மக்கள்.

திருமலைக்கோயில்

அழகான மலையின்மேல் கோயில் இருந்த காரணத்தினாலர் அந்த  ஊருக்கு திருமலைக்கோயில் என்று பெயர்.

அச்சன்புதூர்

தந்தை (அச்சன்) ஸ்தானத்தில் உள்ள போர்வீரன் ஒருவரின் நினைவாகத் அந்தப்பகுதிக்கு அச்சன்புதூர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

வாளேந்தி ரஸ்த்தா

வாள் ஏந்திப் போர் செய்து வெற்றி பெற்றதன் காரணமாக ஒரு ஊருக்கு  வாளேந்தி ரஸ்த்தா என்று நம்முன்னோர்கள் பெயர் வைத்துள்ளார்கள்.

கட்டளையூர்

குறுநில மன்னர்கள் கட்டளையாக (தானமாக) தந்த பகுதியின் பெயர் கட்டளையூர் என்பதாகும்.

பனையூர்
 
பனைகள் அதிகம் இருக்கக்கூடிய ஊர் பனையூர்.

கரிசலூர்

கரிசல்மண் அதிகமாக இருக்கும் ஊர் கரிசலூர்.

பொட்டல்புதூர்

காலியாக பொட்டலான இடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அமைக்கப்பட்ட ஊருக்கு பொட்டல்புதூர் என்று பெயர்.

இடையர்தவணை

இடையர் என்ற ஜாதியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய ஊர் இடையர்தவணை என்று அழைத்தார்கள்.

ரெட்டியார்பட்டி
 
ரெட்டியார் என்ற ஜாதியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வசிக்கும் ஊர் ரெட்டியார்பட்டி என்று சொன்னார்கள்

தேவர்குளம்

தேவர் இனமக்கள் அதிகமாக வசிக்கும் ஊர் தேவர்குளம் எனப்பட்டது.

அணைந்த நாடார் பட்டி

நாடார் சமுதாய மக்கள்  அதிகமாக வசிக்கும் ஊரின் பெயர் அணைந்தநாடார்பட்டி என்பதாகும்.

நெல்கட்டும்செவல்

நெல் அதிகமாக விளையக்கூடிய செவக்காட்டு நிலம் பகுதிக்கு நெல்கட்டும்செவல் என்று பெயர் வைத்தார்கள்

http://oor-peyar-karanam.blogspot.com/2016/01/blog-post_5.html
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக